search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டாலின் கைது"

    தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலினை கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கண்டித்து கருப்பு கொடி காட்டி முற்றுகையிட்ட தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து கவர்னரிடம் மனு கொடுக்க சென்ற தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

    இதனை கண்டித்து பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்டில் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட நகர செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன்,  ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல்லதம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உட்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்பு சட்டமன்ற  உறுப்பினர் ஸ்டாலின்குமார் தலைமை யில்  சாலை மறியல்  போராட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன், நகர செய லாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் துறைïர் அண்ணா துரை, உப்பிலியபுரம் முத்துசெல்வன், ஆதி திராவிடர் நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம், இளைஞரணி  கிட்டப்பா, பிரபு மும்மூர்த்தி, முன்னாள் கவுன் சிலர்கள் மனோகர், கார்த்தி, அன்பு காந்தி, செங்கை அசோகன், அசோக்குமார் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    கீரனூரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர்கள் சேட்டு,  வெங்கடாச்சலம், சத்தியசீலன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு, கீரனூர் பேரூர் கழக பொறுப்பாளர் வக்கீல் அண்ணாத்துரை, மண்டையூர் பாண்டியன், வக்கீல் ராமையா, ஜி.டி.எஸ்.இளவரசன், பன்னீர்செல்வம், கே.ஆர்.பி. ஜெயச்சந்திரன், முருகேசன், குமரவேல், ராஜ் குமார், ஜெயகாந்தி, பேராசிரியர் குறிஞ்சி வாணன், கிருஷ்ணமூர்த்தி, இம்தியாஸ்,பொறியாளர் பாலா, குளத்தூர் மணி ராஜன், கார்த்திக், சவுந்தர் ராஜன் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சென்னை கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் ராஜா, ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 37 பேரை ஊட்டி நகர மத்திய போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர் பழைய பஸ்நிலையத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனைதொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், முருகையா, சின்னவர், சுப்பிர மணியம் உள்பட 31 தி.மு.க.வினரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் பந்தலூர் பஜாரில் தி.மு.க.வினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, நெல்லியாளம் நகர கழக செயலாளர் காசிலிங்கம், நெல்லியாளம் முன்னாள் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம், வக்கீல் சிவசுப்பிரமணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேகர், நகர பொருளாளர் தென்னரசு, எல்.பி.எப். துணை பொதுசெயலாளர் மாடசாமி உள்ளிட்ட 35 பேரை கைது செய்தனர்.

    கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் ஒன்றிய பொறுப்பாளர் நெல்லை கண்ணன், முன்னாள் அமைச்சர் இளித்தொரை கா.ராமசந்திரன் தலைமையில் கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி ஒன்றிய தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை கைது செய்தனர். 
    வேலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 199 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூர்:

    சென்னையில் இன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்று போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வேலூர் அண்ணாசாலையில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் இருந்து தி.மு.க.வினர் பேரணியாக சென்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கார்த்திகேயன், அவைத் தலைவர் முகம்மது சகி உள்பட தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், நாகராஜன் தலைமையிலான போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து, தி.மு.க.வினர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, அணைக்கட்டு ஆகிய பகுதிகளிலும் தி.மு.க.வினர் மறியல் செய்தனர். வேலூர் உள்பட மாவட்டத்தில் 5 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்.காந்தி, நந்தக்குமார், கார்த்திகேயன் ஈஸ்வரப்பன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 199 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ×